May 22, 2026
Thisaigal NewsYouTube
மடானி வீடமைப்பு திட்டம் குறித்து மேலும் விரிவாக்கம் செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

மடானி வீடமைப்பு திட்டம் குறித்து மேலும் விரிவாக்கம் செய்யப்படும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 3 -

நேற்று நடைபெற்ற 2024 பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டில், பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள மடானி வீடமைப்பு திட்டம் குறித்து, மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.

பூமிபுத்ராக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் அந்த வீடமைப்பு திட்ட கட்டுமான தொடர்பான விரிவான செயல் திட்டம் வரையறுக்கப்படும் என கூறினார். கோலாலம்பூர் தலைநகரத்தில் வாழும் ஏழ்மையான 2500 பூமிபுத்ராக்கள், எளிய முறையில் வீடுகளை வாங்குவதற்கான வழிவகை செய்வதோடு அவர்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் உடன் திட்டங்களும் அரசு சார்பு இயங்களோடு இணைந்து கலந்தாலோசிக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

Related News