Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மானிய ஒதுக்கீடு மீட்டுக்கொள்ளப்பட்டதாக சையிட் சாடிக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மானிய ஒதுக்கீடு மீட்டுக்கொள்ளப்பட்டதாக சையிட் சாடிக் குற்றச்சாட்டு

Share:

ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு தருவதை மீட்டுக்கொண்டு, எதிர்க்கட்சி முகாமில் தாம் இணைந்த காரணத்தினால் தமது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட மானியம் மீட்டுக்கொள்ளப்பட்டதாக மூடா கட்சியின் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐசியு எனப்படும் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவிடம் தாம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக மூவார் எம்.பி.யுமான சையிட் சாடிக் குறிப்பிட்டுள்ளார்.

தம்மைப் போலவே எதிக்கட்சியினருக்கும் இன்று வரையில் எந்தவொரு மானிய ஒதுக்கீடும் தொகுதிகளுக்கு வழங்கப்படவில்லை என்று சையிட் சாடிக் தெரிவித்தார்.

எந்தவொரு மாநிலத்திலும் கல்வித் தொடர்பான விவகாரங்களில் குறிப்பாக பள்ளி கட்டுமானத்தில் ஒற்றுமை அரசாங்கம் ஆளும் கட்சி,, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டியது இல்லை என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் பேசியிருப்பது தொடர்பில் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் தமது வாதத்தை முன்வைத்தார்.

Related News