Jul 27, 2026
Thisaigal NewsYouTube
டிஏபி-யுடன் இருந்தாலும் அம்னோ அதன் கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை
தற்போதைய செய்திகள்

டிஏபி-யுடன் இருந்தாலும் அம்னோ அதன் கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை

Share:

ஷாஹ் அலாம், ஏப்ரல் 29-

ஒற்றுமை அரசாங்கத்தில் டிஏபி கட்சியுடன் இருந்தாலும், அம்னோ கட்சி அதன் கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை.

இஸ்லாம் சமயம், மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் உரிமை, மலாய் ஆட்சியாளர்கள் ஆகியவற்றை தற்காக்கும் முதன்மைக் கொள்கைகளில், தாங்கள் தற்பொழுதும் உறுதியாகவே உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

டிஏபி கட்சியுடன் உள்ளதால், அம்னோ அதன் கொள்கைகளைக் கைவிட்டு விட்டதாக சில தரப்பினர் கூறுவது உண்மையல்ல. கட்சியின் கொள்கைகளை தற்காக்கவே, அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த போதும் கூட, கூட்டரசு அரசியலைமைப்புக்கு எதிராக ICERD கொண்டு வரப்பட்ட போது, அம்னோ எதிர்ப்பு பேரணியை நடத்தியிருந்தது.

ஆகையால், அம்னோ-க்கு எதிராக எத்தகை கேலி கிண்டல்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் கட்சியைப் பலப்படுத்துவதில் அனைத்து உறுப்பினர்களும் முனைப்புக் காட்ட வேண்டுமென அஷ்ராப் வாஜ்டி கேட்டுக்கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்