May 22, 2026
Thisaigal NewsYouTube
மாதுவிடம் கொள்ளையிட்டு சென்ற ஆடவர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

மாதுவிடம் கொள்ளையிட்டு சென்ற ஆடவர் தேடப்படுகிறார்

Share:

செனவாங், மே 24-

செனவாங், தாமான் பண்டார் -ரில் இரு பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மாதுவிடம் நகைகளை கொள்ளையிட்டு சென்ற ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகிக்கு ஆடவர் சம்பந்தப்பட்ட மாதுவின் தங்க வளையலை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது ஹட்டா சே தின் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 33 வயது மாது தனது பிள்ளைகளுடன் ஜாலான் டாரேகா 2 -டிற்கு சென்று கொண்டிருக்கும் வேளை, நீல நிற யமாஹா 125Z ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்த உள்ளூர் ஆடவர் சட்டென்று அவரின் கையில் அணிந்திருந்த தங்க வளையலை கொள்ளையிட்டு சென்றதாகவும் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக முகமது ஹட்டா கூறினார்.

தற்போது இது தொடர்பான 16 வினாடி காணொளி ஒன்று சமூக வளைத்தலங்களில் பரவலாக வைரலாகி வருவதை தொடர்ந்து சந்தேகிக்கும் நபரை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக முகமது ஹட்டா மேலும் தெரிவித்தார்.

Related News