May 22, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் தூக்குத்தண்டனையிலிருந்து தப்பினார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் தூக்குத்தண்டனையிலிருந்து தப்பினார்

Share:

புத்ராஜெயா, மார்ச் 28-

ஆஸ்திரேலிய பிரஜையை கொலை செய்ததற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஆடவருக்கு புத்ராஜெயா-விலுள்ள கூட்டரசு நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக குறைத்துள்ளது.

39 வயதுடைய லோ கியான் பூன் -னுக்கு 12 பிரம்படிகளை விதித்து தீர்ப்பளித்த மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வுக்கு தலைமைத் தாங்கிய நீதிபதி டத்தோ சபாரியாஹ் மோஹட் யூசோப், அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அந்த சிறைத்தண்டனை கணக்கிடப்படுவதாக கூறினார்.

கடந்த 2003ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி, ஹான்ஸ் ஹெர்ஸ்வ்க் என்பவரை சிலாங்கூர், சுபாங் ஜெயா-விலுள்ள அவரது வீட்டில் மற்றொரு நபருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் உடலில் சுமார் 23 வெட்டுக்காயங்கள் இருந்ததை தொடர்ந்து குற்றச்சாட்டப்பட்டிருக்கும் லோ கியான் பூன் மறுநாள் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தொடக்கத்தில் அவ்விருவருக்கு 10 ஆண்டுகள் சிறையை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த நிலையில், அவ்விருவரும் குற்றம் புரிந்ததை உறுதிபடுத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம், லோ கியான் பூன் -க்கு தூக்குத்தண்டனையையும் மற்றொரு நபரை சிறையில் வைக்கவும் உத்தரவிட்டது.

கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் அந்த தண்டனையை நிலைநிறுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு