Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ரந்தாவ் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் விபத்தில் சிக்கினார்
தற்போதைய செய்திகள்

ரந்தாவ் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் விபத்தில் சிக்கினார்

Share:

அம்பாங் ஜெயா, மார்ச் 26.

அம்பாங் ஜெயா, ஜாலான் புக்கிட் அந்தரபாங்பங்சா -வில் ரன்த்தாவு பஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஸ்ரீ ஜய்லாஹ் மோஹட் யூசோப் பயணித்துச் சென்ற கார் விபத்துக்குள்ளாகியதில் அவர் காயமின்றி உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 5.08 மணியளவில் டொயோட்டா ஹைலாக்ஸ் மற்றும் மாஸ்டா ஆகிய வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி மோஹட் அசாம் இஸ்மாயில் கூறினார்.

இச்சம்பவத்தின் போது கடுமையான மழை பெய்ந்து கொண்டிருந்ததாகவும் திடீரென்று ஹைலாக்ஸ் ஓட்டுநர் சென்று கொண்டிருக்கும் எதிர்திசையில் Mazda ரக வாகனம் நுழைந்து விபத்துக்குள்ளானதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக மோஹட் அசாம் விவரித்தார்.

இவ்விபத்தில் காயமுற்ற அனைவரும் மேல் சிகிச்சைக்காக அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதில் Hilux -யில் பயணித்த நான்கு பயணிகளில் ஒருவர் ரன்த்தாவு பஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது கண்டறியப்பட்டதாக மோஹட் அசாம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்