நாட்டில் உள்ள அனைத்துப்பள்ளிகளிலும் கற்றல், கற்பித்தல் தொடர்பில் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு விட்டதால் அடுத்த ஆண்டு முதல் கல்வித்தரம், உயர்வு காணாவிட்டால் பழைய காரணங்களை கூற வேண்டாம் என்று பள்ளி நிர்வாகங்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
மாணவர்களின் கல்வித்தரம் உயர்வு அடைய வேண்டும் என்பதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தலைமையாசியரியர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவ்விவகாரத்தில் அதீத அழுத்தத்தை தாம் கொடுக்கப் போவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று பண்டார் பாரு பாங்கி தேசியப் பள்ளியில் மிக மோசமான கட்டடங்களை கொண்ட பள்ளிகளுக்கான முன்னோடித் திட்டம் ஒன்றை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.








