புக்கிட் பிந்தாங் ஜாலான் ன்யொன்யா ஒஃப் ஜாலான் சங்காட் தம்பி டோலாவில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த கடைகளை கோலாலம்பூர் மாநகர் மன்றம் இடித்தது.
முன்னதாக டிபிகேஎல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வெளியேற்ற ஆணையை அக்கடைகளின் உரிமையாளர்கள் மீறியதால் அவை இடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்டக் கடைகள் பொதுப் பாதையில் அனுமதியின்றி செயல்பட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிபிகேஎல் குறிப்பிட்டது.
ஆயிர் சிலாங்கூர், தெனாகா நேஷ்னல் பெர்ஹாட் ஆகிய தரப்புடன் காவல் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சாலைகள், வடிகால், கட்டடங்கள் சட்டம் 1974 [இரிவு 46இன்படி டிபிகேஎல் அமலாக்க அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்ததாக மாநகர் மன்றம் தமது முகநூல் பதிவில் தெரிவித்தது.
சட்டத்திற்குப் புறம்பான கடையைக் காலி செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தால் அதனை கடை முதலாளிகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் இல்லை யென்றால் அக்கடை இடித்துத் தள்ளப்படும் எனவும் அப்பதிவில் டிபிகேஎல் கூறியது.








