Oct 8, 2026
Thisaigal NewsYouTube

ஏபிஐ 150-ஐ எட்டினாலே பள்ளிகளை மூட வேண்டும் – மாமன்னர் வலியுறுத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஏபிஐ 150-ஐ எட்டினாலே பள்ளிகளை மூட வேண்டும் – மாமன்னர் வலியுறுத்து

நாட்டில் காற்றுத் தரக் குறியீடு ஏபிஐ 150 அல்லது அதற்கு மேல் பதிவாகும் பகுதிகளில் உள்ள பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

தொடரும் புகைமூட்டத்தால் மாணவர்களின் உடல்நலம் குறித்து கவலை தெரிவித்துள்ள மாமன்னர், ஏபிஐ 200-ஐ எட்டும்போதுதான் பள்ளிகளை மூட வேண்டும் என்ற தற்போதைய நடைமுறையை மாற்றி, ஏபிஐ 150-ஐ எட்டும்போதே பள்ளிகளை மூடுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அமைப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் மட்டுமின்றி, மூத்த குடிமக்கள் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்களின் உடல்நலத்தையும் பாதுகாக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாமன்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று மாலை 3 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 38 பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது. ஜோகூரில் உள்ள செகாமாட் பகுதியில் அதிகபட்சமாக 190 என்ற ஏபிஐ பதிவாகி, மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை நெருங்கியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →