அரசாங்க சார்புடைய நிறுவனங்களான GLC நியமனங்களில் அரசாங்கம், ஏற்கனவே செய்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் என்று பொருளாதார நிபுணர் டான்ஸ்ரீ ரேமன் நவரத்னம் அறிவுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் பொருளியல் வளர்ச்சியை முன்னெடுக்கும் GLC நிறுவனங்களில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தலைவர்களாக அல்லது வாரிய உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது குறித்து அந்த பொருளாதார நிபுணர் கேள்வி எழுப்பியுள்ளார்.
GLC யை பிரதிநிதிக்கவும், வழிநடத்தவும் அரசியல்வாதிகள் அல்லாத தொழில் சார்பு நிபுணர்கள் நாட்டில் கிடையாதா ? அல்லது அதற்கு பஞ்சமா? என்று நாட்டின் கரூவூலத்தின் முன்னாள் துணைச் செயலாளருமான ரேமன் நவரத்னம் வினவினார்.
அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் Asyraf Wakdi Dusuki, / மாராவின் தலைவராகவும், PKR கட்சியின் பினாங்கு மாநில துணைத் தலைவர் Bakhtiar Wan Chik, / MyCreative Ventures தலைவராகவும் நியமிக்கப்பட்டு இருப்பது தொடர்பில் Transparency International Malaysia அமைப்பின் தலைவரான ரேமன் நவரத்னம் கருத்துரைத்தார்.
அரசியல்வாதிகளின் பிடியில் GLC சிக்குவது என்பது, ஒரு நல்லாட்சி நடைமுறைக்கு முரணானவையாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொழில்முறையை விரிவுப்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கம் பழைய தவறுகளையை மீண்டும் செய்கிறது என்று ரேமன் நவரத்னம் நினைவுறுத்தினார்.








