கோல கங்சார், அக்டோபர்.02-
இராணுவ வீரர்கள் பயணித்த லோரி, சாலையை விட்டு விலகி பாதாளத்தில் விழுந்ததில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4.50 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஈப்போவிற்கு அருகில் மெனோரா சுரங்கப் பாதை அருகில் நிகழ்ந்தது. அந்த இராணுவ லோரியில் 7 வீரர்கள் பயணம் செய்த நிலையில் ஒருவர் உயிரிழந்த வேளையில் எஞ்சியவர்கள் காயமுற்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.








