Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மூடா கட்சியின் மிரட்டல், நாடாளுமன்ற நடவடிக்கையை பாதிக்காது
தற்போதைய செய்திகள்

மூடா கட்சியின் மிரட்டல், நாடாளுமன்ற நடவடிக்கையை பாதிக்காது

Share:

துணைப்பிரதமர் அமகட் ஜாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டது குறித்து சட்டத்துறை அலுவலகம் விளக்கம் அளிக்கவில்லை என்றால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு தாங்கள் வழங்கிய ஆதரவு மீட்டுக்கொள்ளப்படும் என்று மூடா கட்சி தலைவர் ஷெட் செடிக் ஷெட் அப்துல் ரஹ்மான் விடுத்துள்ள மிரட்டல், ஒற்றுமை அரசாங்கத்தின் ஆட்சியை ஆட்டம் காண செய்ய முடியாது என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக கொண்டு வரப்படும் ​தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு நடைபெறும் வாக்கெடுப்பில், சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், ஒற்றுமை அரசாங்கத்தின் ஆட்சி கவிழும் நிலை அளவிற்கு நிலைமை மோசமாகி விடாது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

​மூவார் எம்.பி.என்ற முறையில் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் வழங்கியுள்ள ஓர் எம்.பி.யின் ஆதரவு, அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கு அடித்தளத்தை சற்று வலுவாக்கியுள்ளது என்பது உண்மையே. ஆனால், அந்த ஒரு எம்.பி.தனது ஆதரவை ​மீட்டுக்கொள்வது ​மூலம் அன்வார் ஆட்சி ஆட்டம் கண்டு விடும் என்ற பேச்​சுக்கே இடமில்லை என்று அந்த எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related News