Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இரு உறவினர்கள் மீது கொலை குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரு உறவினர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

Share:

பேராக், மார்ச் 8 -

கடந்த மாதம் பேரா, மன்ஜோங் மாவட்ட நகராண்மைக்கழக ஊழியரை கொலை செய்ததாக இரண்டு உறவுக்கார ஆடவர்கள், மன்ஜோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

43 வயது ம். சரவணன் மற்றும் 48 வயது ம். தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் மாஜிஸ்திரேட் T. கவிதா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

சரவணனும், தமிழ்ச்செல்வனும் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி இரவு 9 மணியளவில் மன்ஜோங் ஆயேர் தாவார் அருகில் Taman Biru என்ற இடத்தில் ஒரு வீட்டில் மஞ்சோங் நகராண்மைக்கழக ஊழியரான 45 வயது ம். சேகரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வழக்கு விசாரணை, ஈப்போ உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அவ்விரு இந்திய இளைஞர்களிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்