கார் மோதியதில், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் ஜொகூர், குளுவாங், ஜாலான் யொங் பெங்-குளுவாங் சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது. இதில் 50 வயதுடைய கந்தன் என்பவர் உயிரிழந்ததாக போலீசார் அடையாளம் கூறினர்.
நிசான் சென்ட்ரா வாகனம், அந்தக் காரிருளில், பாலோவிலிருந்து குளுவாங்கை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது, எதிரே சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியைச் சரியாக கவனிக்காததைத் தொடர்ந்து இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர், எ.சி.பி. பஹ்க்ரின் முகமட் நோஹ் தெரிவித்துள்ளார்.

Related News

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை

நாடு முழுவதும் பெர்கேசோ அதிரடி சோதனை – 159 இடங்களில் சோதனை; 14 நோட்டீஸ்கள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு


