Jul 27, 2026
Thisaigal NewsYouTube
2027 ஆம் ஆண்டு கல்வி முறையில் சீர்திருத்தம்
தற்போதைய செய்திகள்

2027 ஆம் ஆண்டு கல்வி முறையில் சீர்திருத்தம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 30-

தென்கிழக்காசியாவில் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் புருணை ஆகியவற்றுக்கு அடுத்து பின்தள்ளப்பட்ட நிலையில் மலேசிய கல்வி முறை இருப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையைத் தொடர்ந்து மலேசிய கல்வி முறையில் சீர்திருத்தம் செய்வதற்கு கல்வி அமைச்சு உறுதி பூண்டுள்ளது.

மாணவர்கள், கல்வியை பாதியிலேயே நிறுத்திக்கொள்ளும் பிரச்னையை கையாளுவது, 2027 ஆம் ஆண்டு கல்வி முறையில் பாலர் பள்ளி கல்விக்கு அதிக அழுத்தம் கொடுப்பது உட்பட நாட்டின் கல்வி முறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்வதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருவதாக அது தெரிவித்துள்ளது.

மலேசிய மாணவர்கள் அனைவரும் தங்களின் தொடக்க கல்வியிலிருந்து விடுபட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு கல்வி அமைச்சின் கீழ் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாலர் பள்ளி வகுப்புகள் விரிவுப்படுத்தப்படும்.

அதேவேளையில் சேவையில் உள்ள ஆசிரியர்களின் ஆற்றல் மற்றும் அவர்களின் தொழில்நிபுணத்தை மேம்படுத்திக்கொள்வதற்கு பல்வேறு பணித்திட்டங்களுடன் ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதில் கல்வி அமைச்சு சிறப்பு கவனம் செலுத்த விருப்பதாக அறிவித்துள்ளது.

தென்கிழக்காசியாவில் வறுமை நிறைந்த நாடான வியட்நாம், அமெரிக்காவுடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த போரில் சீர்குலைந்து, சின்னாபின்னமான நிலையில், அந்த குட்டி நாடு, தற்போது பொருளாதாரத்தில் துரிதமாக முன்னேறி வரும் நாடாக மாறியுள்ளது.

அதேவேளையில் மாணவர்களின் கல்வி அடைவு நிலையில் சிங்கப்பூருக்கு அடுத்து இரண்டாவது கல்வி வளர்ச்சி பிராந்தியமாக வியட்நாம் மாறியுள்ளது என்று உலக வங்கி அறிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்