Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்துறை அலுவலகத்தில் விசாரணை அறிக்கை
தற்போதைய செய்திகள்

சட்டத்துறை அலுவலகத்தில் விசாரணை அறிக்கை

Share:

கிரிப்டோ நாணயம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தனிநபர் ஒருவரிடம் 12 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி கேட்டு, மிரட்டியது தொடர்பில் ஐந்து போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட புலன் விசாரணை அறிக்கை, நாளை வியாழக்கிழமை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த உயர் போலீஸ் அதிகாரிகளுக்கான தடுப்புக்காவல் கெடு, முடிவடைந்தததும் மேலும் விவரங்கள் வெளியிடப்படும் என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டம் 384 ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த ஐந்து போலீஸ் அதிகாரிகள் தொடர்பான அறிக்கையை தாமோ அல்லது போலீஸ் படைத் தலைவராக வெளியிடக்கூடும் என்று இன்று புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் இதனை குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்