கேமரன் மலை, நவம்பர்.20-
கேமரன் மலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட பதின்ம வயதுடைய இரண்டு பெண்கள் நேற்று புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டனர்.
15 வயதுடைய அந்த இரு பெண்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கேமரன் மலை மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.
அந்த இரு பெண்களையும் கண்டுபிடிக்க உதவிய அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.








