MRR2 எனப்படும் Lebuhraya Lingkaran Tengah 2 சாலையில் Bandar Tasik Selatan னில் இன்று காலை 7.30 மணியளவில் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாகனமோட்டி ஒருவர் உயிரிழந்தார். இதில் Nissan Almera காரில் பயணித்த 46 வயது ஆடவர், காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
சுங்கை பீசி தீயணைப்பு நிலையத்திலிருந்து சென்ற 7 வீரர்கள், சிறப்பு சாதனங்களை பயன்படுத்தி சுமார் 8 நிமிடத்தில் அந்த ஆடவரின் உடலை மீட்டனர். சவப்பரிசோதனைக்காக பிரேதம் , Canselor Tuanku Muhriz மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாக அப்பேச்சாளர் மேலும் கூறினார்.








