Jul 27, 2026
Thisaigal NewsYouTube
காலுறை விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்
தற்போதைய செய்திகள்

காலுறை விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 04-

அல்லா சொல் கொண்ட காலுறை விற்பனை தொடர்பில், சமய உணர்வைத் தூண்டி மக்களிடையே வெறுப்புணர்வை விதைக்கும் நடவடிக்கையை உம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தனது அரசியல் நலனுக்காக சமய உணர்வை அவர் பயன்படுத்தி கொள்வாரேயானால், அவர் அரசியல் தடத்தில் நிலைத்து நிற்க முடியாது என பிகேஆர் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் வலியுறுத்தினார்.

சர்ச்சைக்குரிய காலுறையை விற்பனை செய்திருந்த KK மார்ட் கடைகளை புறக்கணிக்கும் பரப்புரையை டாக்டர் அக்மால் சாலேஹ் தீவிரமாக முன்னெடுத்ததிலிருந்து, நாட்டு மக்களிடையே இனப் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, எதிர்மறையான நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

இதுவரையில் KK மார்ட்-ட்டின் 3 கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசியலில் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள அவ்விவகாரத்தை கேடயமாக பயன்படுத்திக்கொள்வதால், மக்களுக்கு எவ்வித ஆதாயமும் கிடைக்க போவதில்லை.

மக்களுக்கு உண்மையாக ஆதாயமளிக்கக்கூடிய கடுமையான விவகாரங்களைக் கண்டறிந்து அவர் குரல் கொடுக்க வேண்டும். காலுறை விவகாரத்தை யாரும் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என பேரரசர் வழங்கியுள்ள உத்தரவை டாக்டர் அக்மால் சாலேஹ் மதிக்க வேண்டும் என நிக் நஸ்மி நிக் அஹ்மத் கேட்டுக்கொண்டார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்