போலீஸ்காரரான தமது கணவரின் துப்பாக்கி சூட்டிற்கு ஆளான மாது பரிதாபமாக மாண்டார். இத்துயரச்சம்பவம் இன்று காலை 7.26 மணியளவில் கங்கார், சிம்பாங் அம்பாட், கம்போங் பெண்டாங் பாருவில் ஒரு வீட்டில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் 26 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் லான்ஸ் காப்பரல் அந்தஸ்தை கொண்ட போலீஸ்காரர் ஒருவரை தாங்கள் கைது செய்துள்ளதாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Yusharifuddin Mohd Yusof தெரிவித்தார். அந்த போலீஸ்காரர் துப்பாக்கியினால் தமது மனைவியை ஐந்து முறை சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








