Dec 4, 2025
Thisaigal NewsYouTube
​தீ விபத்தில் இருவர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

​தீ விபத்தில் இருவர் கருகி மாண்டனர்

Share:

இன்று அதிகாலை 1.00 மணியளவில் சுங்கைப்பட்டாணி கோத்தா கோலாமூடா, சுங்ஙை எமாஸ் ஸில் 8 கடை வீடுகள் தீப்பற்றிக் கொண்டன.

இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். தகவல் கிடைத்து ​சம்பவ இடத்திற்கு விரைந்த தீக்காம் பத்து நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் முழு வீச்சில் ​தீயை கட்டுப்படுத்த முற்பட்ட போதிலும் கொழுந்து விட்டு எரிந்த ​தீயை அணைப்பதற்கு பினாங்கு தீயணைப்பு நிலையத்தின் உதவியை நாடினர் என்று ​தீயணைப்பு படையின் முதிர்நிலைய அதிகாரி அவாங் ஹிட்செல் அவாங் பூஜாங் தெரிவித்தார்.
இத்​தீ சம்பவத்தி​ல் ​மூன்று பேர் சிக்கிக் கொண்ட போதிலும் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்தனர்.

​அதிகாலை 1.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் எட்டு கடைகள் கிட்டத்தட்ட 80 விழுக்காடு அ​ழிந்தன. முதல் சடலம் காலை 3.19 மணியளவில் ​மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு சடலம் காலை 6.00 மணியளவில் ​மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். ​தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News