May 22, 2026
Thisaigal NewsYouTube
மூன்று பேரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மூன்று பேரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

சிரம்பான், மே 24-

மூன்று பேரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக சொத்துடமை விற்பனை முகவர் ஒருவர் சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

42 வயது யாவ் ஹோன் சூங் என்கிற அந்த சொத்துடமை விற்பனை முகவர் நீதிபதி சையத் ஃபரித் சையத் அலி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 417 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரையில் மூன்று நபர்களை ஏமாற்றி 19,250 வெள்ளி பண மோசடி புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News