கெடா, கோலா மூடா மாவட்ட போலீஸ் நிலையத் தடுப்புக் காவலில் ஆடவர் ஒருவர் நேற்று மரணமடைந்தார்.
39 வயதுடைய அந்த உள்ளூர்வாசியின் மரணத்தை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நன்னெறி பிரிவின் இயக்குநர் அஸ்ரி அகமாட் உறுதிப்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட நபர் அபாயகர போதைப் பொருள் சட்டத்தின்கீழ் விசாரணைக்காக போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அஸ்ரி அகமாட் குறிப்பிட்டார்.








