Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் சட்டத்தை மீறினேனா? Pang Sock Tao மறுப்பு
தற்போதைய செய்திகள்

தேர்தல் சட்டத்தை மீறினேனா? Pang Sock Tao மறுப்பு

Share:

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சியினர் கூறி வருவதைப் போன்று 1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்டவிதிகளை தாம் மீறியதாக கூறப்படுவதை பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சாக் தாவோ மறுத்துள்ளார்.

இந்த இடைத் தேர்தல் பிரச்சார காலக்கட்டம் முழுவதும் தாமோ தமது தரப்பினரோ தேர்தல் சட்டத்திற்கு உட்பட்டே தங்களின் பிரச்சார நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக பாங் சாக் தாவோ குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் இந்த தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் இதுவரையில் சட்டத்தை பின்பற்றியே நடந்துள்ளது என்று தாம் நம்புவதாக பாங் சாக் தாவோ தெரிவித்தார்.

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இந்த இடைத் தேர்தலை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை கோலகுபு பாரு, அரச மலேசிய போலீஸ் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பு நிகழ்வை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாங் சாக் தாவோ இதனை தெரிவித்தார்.

இதனிடையே இன்று நடைபெற்ற போலீஸ்காரர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் சம்பந்தபட்ட முன்கூட்டியே வாக்களிப்பு, சுமூகமாகவும், முறையாகவும் நடைபெற்றது குறித்து டிஏபி சார்பாக போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சாக் தாவோ தமது மனநிறைவை தெரிவித்து கொண்டார்.

இந்நிலையில் முன்கூட்டியே வாக்களிப்பில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள், போலீஸ் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக பாங் சாக் தாவோ குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்