Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தோமி தோமஸ் மீதான விசாரணை என்னவானது?
தற்போதைய செய்திகள்

தோமி தோமஸ் மீதான விசாரணை என்னவானது?

Share:

முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ் எழுதிய My Story: Justice in the Wilderness எனும் நூல் தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழுவின் முடிவு என்னவானது என்று ஜெர்லுன் எம்.பி. அப்துல் கானி அமாட், அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.

அந்த சிறப்புக்குழு தனது விசாரணையின் ஆகக்கடைசியான நிலவரங்களை அறிவிக்க வேண்டும் என்று அந்த எம்.பி. கேட்டக்கொண்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய அந்த நூலில் சட்டத்துறை அலுவலகம், அரசாங்க ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரை தோமி தோமஸ் குறைக்கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனவே விசாரணை அறிக்கையின் கடைசி நிலவரம் குறித்து பொதுவில் அறிவிக்கப்பட வேண்டும் என்று அப்துல் கானி அமாட் கேட்டுக்கொண்டார்.

Related News