கிழக்குகரையோர நெடுஞ்சாலையான Lebuh Raya Pantai Timur, தெமர்லோ, கம்போங் செம்பாக்கா அருகில் Ford Ranger வாகனம் ஒன்று , கொள்கலன் லோரியுடன் மோதி, அந்த வாகனம் தீப்பிடித்துக்கொண்டதில் இருவர் கருகி மாண்டனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 5.24 மணியளவில் நிகழ்ந்ததாக தீயணைப்பு,மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார். இரு வாகனங்களிலும் கொளுந்து விட்டு எரிந்த தீ முற்றாக அணைக்கப்பட்ட பின்னர் Ford Ranger வாகனத்திலிருந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புத்துறை பொது உறவு அதிகாரி Zulfadil Zakaria தெரிவித்தார்.








