May 22, 2026
Thisaigal NewsYouTube
பேத்தியுடன் காணாமல் போன மூதாட்டியை தேடி மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
தற்போதைய செய்திகள்

பேத்தியுடன் காணாமல் போன மூதாட்டியை தேடி மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

Share:

SELANGOR, KUALA KUBU BHARU, BUKIT BULUH TELUR எனுமிடத்தில் 12 வயதுடைய தனது பேத்தியுடன் காணாமல் போன 62 வயதுடைய மூதாட்டியை தேடி மீட்கும் பணிகள் இன்று காலை மணி 8.30 அளவில் மீண்டும் தொடரப்பட்டது.

டுரியான் தோட்டத்திற்கு செல்லும் வழியில் தாம் சிக்கிக்கொண்டது குறித்து, நேற்று பிற்பகல் மணி 12 அளவில் தனது தாயார், தம்மை தொடர்புக் கொண்டு தெரிவித்ததை அடுத்து, மாலை மணி 3.12 அளவில் அவ்வாடவர் தீயணைப்பு மீட்பு துறையின் உதவியை நாடியுள்ளார்.

அதற்கடுத்து, KUALA KUBU BHARU தீயணைப்பு மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 8 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு, தேடி மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.நேற்று மாலை மணி 7.30 வரை தேடியும் அவ்விருவரும் கிடைக்காததை அடுத்து, தேடி மீட்கும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.

Related News