Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சிறையில் நஜிப்-க்கு சிறப்பு உபசரணை அளிக்கப்படுகின்றதா?
தற்போதைய செய்திகள்

சிறையில் நஜிப்-க்கு சிறப்பு உபசரணை அளிக்கப்படுகின்றதா?

Share:

காஜாங், மார்ச் 28-

1MDB நிதிமுறைக்கேடு தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக், காஜாங் -கிலுள்ள சிறைச்சாலையில் அந்த தண்டனையை அனுபவிக்கவில்லை என பல்வேறு செய்திகள் அண்மையக் காலமாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

அவர் சிறையில் இருப்பதற்கான புகைப்படங்கள் ஏதும் வெளிவராததால், அந்த ஆருடங்கள் எழுந்ததாக நம்பப்படுகின்றது. இந்நிலையில், அண்மையில், காஜாங் சிறையிலிருந்து விடுதலையாகிய பேச்சாளர் வான் ஜீ வான் ஹஸ்ஸின் அந்த ஆருடங்களை மறுத்துள்ளார்.

டத்தோ ஸ்ரீ நஜிப் சிறைத்தண்டனையை அனுபவித்து வருவது உண்மை என்றாலும், நாட்டின் அந்த முன்னாள் முதன்மை தலைவருக்கு அங்கு சிறப்பு உபசரணைகள் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

இதர கைதிகளைப் போன்று, அவர் சிறை ஆடைகளை அணிவதில்லை. வீட்டில் உள்ளதைப் போல் உடைகளை அணிகின்றார். அதே சிறையில் தாம் சிறைக்கான ஆடையை அணிந்திருந்ததை சுட்டிக்காட்டிய வான் ஜீ வான் ஹஸ்ஸின், டத்தோ ஸ்ரீ நஜிப்-க்கும் இதர கைதிகளுக்கும் வெவ்வேறான உபசரணை வழங்கப்படுவதாக மலேசியா கினி இணைய செய்தி ஊடகத்திற்கு அளித்திருந்த நேர்க்காணலில் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக நிந்தனைக் கூற்றை வெளியிட்டிருந்த வான் ஜீ வான் ஹஸ்ஸின், சில மாத காலம் சிறைத்தண்டனையை அனுபவித்த பிறகு, கடந்த 22ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்