Jul 28, 2026
Thisaigal NewsYouTube
GRO பெண்கள் கைது, குடிநுழைவுத்துறை நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

GRO பெண்கள் கைது, குடிநுழைவுத்துறை நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், மே 04-

கோலாலம்பூர், ஜாலான் பூச்சோங் மேஸ்ரா என்ற இடத்தில் எந்தவொரு விளம்பரப்பலகையுமின்றி மிக ரகசியமாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் இரண்டு கேளிக்கை மையங்களில் குடிநுழைவுத்துறையினர் இன்று அதிகாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் உபசரணைப் பணியாளர்கள் என்ற போர்வையில் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 51 பெண்கள், 37 ஆண்கள் உட்பட மொத்தம் 90 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இரண்டு சிறார்களும் அடங்குவர்.

அமலாக்க அதிகாரிகள் எளிதில் அந்த கேளிக்கை மையங்களில் நுழைந்து விடாமல் இருக்க, இரும்புக் கதவுகளை அரணாக கொண்டு அந்த கேளிக்கை மையங்கள் செயல்பட்டு வந்ததாக குடிநுழைவுத்துறையின் துணை தலைமை இயக்குநர் ஜஃப்ரி எம்போக் தாஹா தெரிவித்தார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது மொத்தம் 156 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாக அவர் விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்