Oct 10, 2026
Thisaigal NewsYouTube

7 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது மசீச

திசைகள் செய்திப்பிரிவு
Share:
7 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது மசீச

கோலாலம்பூர், ஜூன்.13-

பொதுத் தரவுகள் கசிவு விவகாரத்தைச் சமாளிப்பதற்கு மசீச, 7 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. மலேசியாவில் உள்ள கைப்பேசி பயனீட்டாளர்களின் முழுத் தரவுகளையும் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து மசீச இந்த 7 பரிந்துரைகளை முன்வைத்திருப்பதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.

தனிநபர்களின் அடையாள நெறிமுறைகள் மீது வெளிப்படையான, சுதந்திரமான தணிக்கையைச் செயல்படுத்துவதும் அந்த திட்டங்களில் அடங்கும் என்று வீ கா சியோங் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் எந்தவொரு தரவு சேகரிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு முன்னதாக முதலில் அது குறித்து பொது பேச்சுவார்த்தை நடத்தும் முறை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது இரண்டாவது பரிந்துரையாகும் என்று வீ கா சியோங் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →