May 21, 2026
Thisaigal NewsYouTube
530 ஆவது தமிழ்ப்பள்ளியாக ஹீவூட் தமிழ்ப்பள்ளி திகழ்கிறது
தற்போதைய செய்திகள்

530 ஆவது தமிழ்ப்பள்ளியாக ஹீவூட் தமிழ்ப்பள்ளி திகழ்கிறது

Share:

நாட்டின் 530- ஆவது வது தமிழ்ப்பள்ளியாக, பேராக், SUNGAI SIPUT, HEAWOOD தமிழ்ப்பள்ளி வரும் 2024/2025 கல்வியாண்டில் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கோடியே 30 லட்சம் செலவில் ஏறக்குறைய 5.9 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இப்பள்ளி, நாட்டின் தமிழ்க்கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக திகழவிருக்கிறது.

நேற்று இப்பள்ளி வளாகத்தில் பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன், கல்வியமைச்சின் அதிகாரிகள், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்தினருடன் இடம் பெற்ற சந்திப்பில் HEAWOOD தமிழ்ப்பள்ளி புதிய கல்வியாண்டில் செயல்படத் தொடங்குவதற்கு ஏதுவாக அடுத்தக் கட்ட பணிகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

குவால கங்சார் மாவட்டத்தின் ஒரு வட்டாரமாக சுங்ஙாய் சிப்புட் விளங்கும் நிலையில், தற்போது அங்கு 5 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News