Jan 19, 2026
Thisaigal NewsYouTube
அந்த இரு நபர்கள் எஸ்.பி.ஆர்.எம். மிடம் ஒப்படைக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

அந்த இரு நபர்கள் எஸ்.பி.ஆர்.எம். மிடம் ஒப்படைக்கப்பட்டனர்

Share:

வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு விசா வெளியீட்டில் முறைகேடு புரிந்ததாக சந்தேகிக்கப்படும் டாக்காவில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பணிபுரிந்த இரு மலேசிய குடிநுழைவு அதிகாரிகள் பிடிபட்டதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும், குடிநுழைவுத்துறையும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பலாபலனாகும்.

மலேசியாவிற்குள் சுலபமாக நுழைவதற்கு வங்காள தேசப்பிரஜைகளிடம் லஞ்சம் பெற்று, விசா வெளியிடப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், தூதரகத்தில் பணியாற்றிய அந்த இரு அதிகாரிகள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வந்ததாக மலேசிய குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசொஹ் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்காக அந்த இரு அதிகாரிகளும் டாக்காவிலிருந்து தாயகம் திரும்பும்படி உத்தரவிடப்பட்டனர். அவர்கள் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி கோலாலம்பூர் வந்து சேர்ந்த போது எஸ்.பி.ஆர்.எம். மினால் கைது செய்யப்பட்டனர் என்று ருஸ்லின் ஜூசொஹ் குறிப்பிட்டார்.

லஞ்சத்தின் வாயிலாக அவர்கள் ஈட்டியதாக நம்பப்படும் 31 லட்சம் வெள்ளி சொத்துகள் எஸ்.பி.ஆர்.எம். மினால் முடக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News