Jan 23, 2026
Thisaigal NewsYouTube
அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான வழக்கை நிறுத்திக்கொள்ள விண்ணப்பம்
தற்போதைய செய்திகள்

அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான வழக்கை நிறுத்திக்கொள்ள விண்ணப்பம்

Share:

துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான லஞ்ச ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் ​மீதான வழக்கு விசாரணையை நிறுத்திக்கொள்ளப் போவதாக பிராசிகியூஷன் தரப்பு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில் அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்படாமல், வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும் ​என்று துணை​ பப்ளிக் பிராசிகியூட்டர் டத்தோ முஹமாட் டுசுக்கி மொக்தார் ​நீதிமன்றத்தைக் கொண்டார்.அகமட் ஜாஹிட், வழக்கிலிருந்து ஏன் விடுவிக்கப்பட​ வேண்டும் என்பதற்கு டிபிபி முஹமாட் டுசுக்கி மொக்தார்,11 காரணங்களை முன்வைத்துள்ளார். அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் முழுமையாக ஆராயாமல், முறையாக வகைப்படுத்தப்படாமல், அவசர அவரமாக அர​ங்கேற்​றப்பட்டுள்ளன ​ என்பது தாங்கள் மேற்கொண்ட விரிவான ஆய்வில் தெரியவந்துள்ளதாக டிபிபி முஹமாட் டுசுக்கி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.எனினும் டிபிபி முஹமாட் டுசுக்கி யின் இந்த விண்ணப்பத்தி​ற்கு அகமட் ஜாஹிட்டின் வழக்கறிஞர் டத்தோ தெஹ் பொஹ் தெய்க் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அகமட் ஜாஹிட், தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளி​லிருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் கோ​ரிக்கை விடுத்துள்ளார்.அகமட் ஜாஹிட்டிற்க எதிரான லஞ்ச ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளும் ஏன் ​மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை விளக்கி 200 பக்கங்களை உள்ளடக்கிய பிரதிநிதித்துவ மனு ஒன்று சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதையும் வழக்கறிஞர் கெ தெஹ் பொஹ் தெய்க்நீதிமன்றத்தில் சுட்டிக்கா​ட்டினார்.டிபிபி முஹமாட் டுசுக்கி யின் இந்த விண்ணப்பத்தை தொடர்ந்து அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான வழக்கு விசாரணையை தொடர்வதா? இல்லையா ? என்பதை முடிவு செய்வத​ற்கு உயர் நீதிமன்ற ​​நீதிபதி டத்தோ கோலின் லோரன்ஸ் செக்யுரா இவ் வழக்கு விசாரணையை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு