Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தலைநகரில் மரங்களை பராமரிப்பதைக் கண்காணிக்கும் சிறப்பு குழு
தற்போதைய செய்திகள்

தலைநகரில் மரங்களை பராமரிப்பதைக் கண்காணிக்கும் சிறப்பு குழு

Share:

கோலாலம்பூர், ஜூன் 04-

கோலாலம்பூரில் மரங்களைப் பராமரிப்பதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழு அதன் முதல் கூட்டத்தை இம்மாதம் நடத்தவுள்ளது.

தொடக்க கூட்டத்தின் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயா கார்ப்பரேஷன் மற்றும் தெனகா நேஷனல் பெர்ஹாட் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வை பார்வையிட்டப் பின்னர் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அந்த சிறப்புக் குழுவில் அரசு சாரா நிறுவனங்கள், மர நிபுணர்கள் மற்றும் மலேசியாவின் வன ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆகியோர் இடம் பெற்று இருப்பதாக டாக்டர் ஜாலிஹா கூறினார்.

Related News