Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பெண் தலைமை செயல்முறை அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

பெண் தலைமை செயல்முறை அதிகாரி கைது

Share:

அரசாங்க சார்பு நிறுவனம் ஒன்றின் துணை நிறுவனத்தில் தலைமை செயல்முறை அதிகாரியாக பணியாற்றி வரும் மாது ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது.

அதிகாரத்தை தவாறாக பயன்படுத்தியது தொடர்பில் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் வட்டாரங்கள் கூறுகின்றன.

கிடங்கு ஒன்றின் சீரமைப்பு பணிகளை நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படாமல் வெறும் 19 லட்சம் வெள்ளி செலவை மட்டும் கணக்கைக் காட்டி அந்த திட்டம் நிறைவேறியது போல தோற்றத்தை ஏற்படுத்த அந்த பெண் அதிகாரி முற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது அந்த ஆணையத்தின் தகவல்கள் கூறுகின்றன.

Related News