Mar 28, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் லோரி ஓட்டுநரும், உதவியாளரும் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் லோரி ஓட்டுநரும், உதவியாளரும் உயிரிழந்தனர்

Share:

பத்து பஹாட், ஜூன்.13-

மூன்று கனரக வாகனங்கள் சம்பந்தபட்ட விபத்தில் லோரி ஓட்டுநரும், உதவியாளரும் உயிரிழந்தனர். இந்த விபத்து நேற்று காலை 8.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 81.9 ஆவது கிலோ மீட்டரில் ஜோகூர், பத்து பஹாட் அருகில் நிகழ்ந்தது.

லோரி ஓட்டுநரான 45 வயது R. பூபாலன் மற்றும் அவரின் உதவியாளரான 35 வயது R. சிவசந்திரன் ஆகியோர் இந்த விபத்தில் மாண்டதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருலனுவார் முஷாடாட் அப்துல்லா சானி தெரிவித்தார்.

பூபாலனும், சிவசந்திரனும் பயணித்த மின்சாரப் பொருட்களை ஏற்றிச் சென்ற லோரி, வெட்டுமர லோரியின் பின்புறம் மோதி, எண்ணெய் டெங்கர் லோரியில் மோதியதாக அவர் குறிப்பிட்டார்.

லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் கடுமையான காயங்களுக்கு ஆளான இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஷாருலனுவார் தெரிவித்தார்.

வெட்டு மர லோரி ஓட்டுநர் சொற்ப காயங்களுக்கு அளாகி Batu Pahat, Sultanah Nora Ismail மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை