Oct 16, 2026
Thisaigal NewsYouTube

காதலனை தேடுவதை விட வேலையை தேடுவதில் சிரமமாக உள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காதலனை தேடுவதை விட வேலையை தேடுவதில் சிரமமாக உள்ளது

நவ.22-

காதலன் அல்லது காதலி கிடைப்பதைவிட பொருத்தமான வேலை கிடைப்பது மலேசியாவில் மிகச் சிரமாக உள்ளது என்று இளையோர்களிடையே மூன்றில் ஒரு பகுதியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

காதலன் அல்லது காதலியை தேடுவது சற்று சிரமம்தான். ஆனால், தொடர்ந்து முயற்சி செய்தால் பொருத்தமான துணை கிடைத்து விடுகிறது. ஆனால், வேலை அப்படி அல்ல. பொருத்தமான வேலை கிடைக்க மிகச்சிரமமாக உள்ளது என்று இளையோர்கள் மத்தியில் மூன்றில் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர் என்று வேலை தொடர்பான ஆய்வு மையான Jobstreet by Seek தெரிவித்துள்ளது.

24 வயதுக்கு கீழ்பட்ட வயதுடைய இளையோர்களை இந்த ஆய்வு உள்ளடக்கியிருந்ததாக அது குறிப்பிட்டுள்ளது. தற்போது இளையோர்களுக்கு பொருத்தமான வேலை கிடைப்பது என்பது காதலன், காதலி கிடைப்பதைவிட மிகுந்த சவாலை தர வல்லதாக உள்ளது என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →