Jul 10, 2026
Thisaigal NewsYouTube
அட்டிலா தி ஹன்'-ஐ-யே விஞ்சிய நஜீப்பின் மெகா ஊழல்: 809 பக்க தீர்ப்பில் நீதிபதி சாடல்
தற்போதைய செய்திகள்

அட்டிலா தி ஹன்'-ஐ-யே விஞ்சிய நஜீப்பின் மெகா ஊழல்: 809 பக்க தீர்ப்பில் நீதிபதி சாடல்

Share:

மலேசிய வரலாற்றையே உலுக்கிய 1எம்டிபி நிதி ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் குற்றங்கள், வரலாற்றின் மிகக் கொடிய கொள்ளையனான ' அட்டிலா தி ஹன்' செய்ததை விடவும் பெரியது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுவேரா சாடியுள்ளார். உலக ஊடகங்களால் "உலகின் மிகப்பெரிய கொள்ளையாட்சி" என வர்ணிக்கப்பட்ட இந்த வழக்கின் 809 பக்க விரிவான தீர்ப்பு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

சுமார் 6 ஆண்டுகள் நீடித்த மலேசிய நீதிமன்ற வரலாற்றின் மிக நீண்ட இந்த விசாரணையின் முடிவில், நஜீப் ரசாக் மீதான 25 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். 1எம்டிபி நிதியிலிருந்து 2.28 பில்லியன் ரிங்கிட்டை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காகவும், பணமோசடியில் ஈடுபட்டதற்காகவும் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 11.387 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் அவர் அனுபவித்து வரும் சிறைத்தண்டனை நிறைவடைந்த பிறகு, 2028-ஆம் ஆண்டு முதல் இந்த புதிய 15 ஆண்டு சிறைத்தண்டனை தொடங்கும் என்றும் நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுவேரா தன் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்