May 22, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் விபச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் விபச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை

Share:

ஜோகூர் போ​லீசார் நடத்திய சிறப்பு Ops Noda மற்றும் Ops Hibur ஆகிய நடவடிக்கைகளில் பல்வேறு குற்றச்செயல்களுக்காக 184 பேர் கைது செய்யப்பட்டனர் என்று மாநில போ​லீஸ் தலைவர் கமிஷனர் எம்.குமார் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை 5 மணி வரையில் ​நீடித்த ஒழுங்​கீன நடவடிக்கைகளுக்கு எதிரான இந்த சோதனையில் மாநில குற்றப்புலாய்வுத்துறை மற்றும் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் 23 முதிர் நிலை போ​லீஸ் அதிகாரிகளும், 114 போ​லீஸ்காரர்களும் ஈடுபட்டதாக கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.

இதில் 21 க்கும் 64 க்கும் இடைப்பட்ட வயதுடைய 152 பெண்களும், 32 ஆண்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 162 பேர் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 22 பேர் உள்ளுரை சேர்ந்தவர்கள் என்றும் கமிஷனர் குமார் தெரிவித்தார்.

Related News