Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் JPJ ஓட்டுநர் உரிமப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் JPJ ஓட்டுநர் உரிமப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

Share:

செத்தாப்பாக், மே 08-

செத்தாப்பாக், வங்சா மாஜு- வில் உள்ள கோலாலம்பூர் சாலை போக்குவரத்துத் துறை அலுவலகத்தின் ஓட்டுநர் உரிமப் பிரிவு, பழுதுபார்க்கும் பணிக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அக்கட்டிடத்தின் மேற்கூரையை சரி செய்வதற்காக அப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகவும் இச்சம்பவம் தொடர்பாக கோலாலம்பூர், JPJ துறையிடமிருந்து இன்று ஓர் அறிக்கை பெறுவதற்கு தமது தரப்பு காத்திருப்பதாகவும் சாலை போக்குவரத்து துறையின் துணை இயக்குநர் ஏடி ஃபெட்லி ரம்லி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதியில் மக்களுக்கு எந்தவொரு இடையூரும் விளைவிக்காமல் சேவைகள் சீராக இயங்குவதை அத்தரப்பு உறுதி செய்வதாக ஏடி ஃபெட்லி நேற்று தகவல் வெளியிட்டார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, அவ்விடத்திலுள்ள அச்சுப்பொறி, கணிணிகள் போன்ற பொருட்கள் பழுதாகியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அக்கட்டடத்தின் கூரையில் இருந்து கசிவு ஏற்பட்டு வளாகத்திற்குள் நீர் தேங்குவதை காட்டும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக ஏடி ஃபெட்லி குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்