கிளந்தானில் அரைக்கால் காற்சட்டையுடன் நடமாடிய 7 பதின்ம வயதுடைய இளைர்கள், மாநில இஸ்லாமிய சமயப் பிரிவு அமலாக்கா அதிகாரிகளால் வளைத்துப் பிடிக்கப்பட்ட நிலையில் விசாரணைக்குப் பின்னர் அவர்கள் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத்துறை, போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கிளந்தான் ஷரியா சட்ட அமலாக்கப் பிரிவின் உதவி இயக்குநர் Jaheik Mohd Fadzuli Mohd Zain தெரிவித்தார்.
கால் தொடைகள் தெரியும் அளவிற்கு அவர்கள் காற்சட்டையை அணிந்து இருந்ததாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து அந்த ஏழு இளைஞர்களும் தடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








