எட்டு வீடுகள் தீக்கிரையாகிய சம்பவத்தில் மாது ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு ஆடவர் தீக்காயங்களுக்கு ஆளாகினார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஜோகூர், மாசாய், Kampung Pertanian, Jalan Haji Hassan 3 என்ற இடத்தில் நிகழ்ந்தது.
33 வயது Rahmaniyah என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக தீயணைப்பு, மீட்புத்துறை பேச்சாளர் அடையாளம் கூறினார். அதேவேளையில் தீக் காயங்களுக்கு ஆளான அந்த மாதுவின் குடும்பத்தை சேர்ந்த 43 வயது ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இத்தீயினால் 27 பேர் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்ததாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.








