Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கழிவறையில் பெண்ணை ஆபாசமாக காணொளி எடுத்த ஆடவர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

கழிவறையில் பெண்ணை ஆபாசமாக காணொளி எடுத்த ஆடவர் தேடப்படுகிறார்

Share:

கோத்தா கினாபாலு, ஏப்ரல் 17-

கோத்தா கினாபாலு, ஜாலான் ஹாஜி சாமான்-னில் உள்ள ஒரு பேரங்காடியின் கழிவறையில் பெண் ஒருவரை ஆபாசமாக காணொளி எடுத்ததற்காக ஆடவர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 3.34 மணியளவில் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய பெண்ணிடமிருந்து புகார் பெறப்பட்டதாக கோத்தா கினாபாலு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது சய்டி அப்துல்லா கூறினார்.

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு 8.40 மணியளவில் குறிப்பிடப்பட்ட கழிவறை கதவின் கீழ் அடையாளம் தெரியாத அவ்வாடவர் தொலைப்பேசியை வைத்திருப்பது அப்பெண் கண்டறிந்ததாக முகமது சய்டி தெரிவித்தார்.

அவ்விடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆபாசமாக புகைப்படம் அல்லது காணொளி எடுப்பதை மட்டுமே சந்தேகிக்கும் அவ்வாடவர் இலக்காக கொண்டிருந்ததாக முகமது சய்டி ஓர் அறிக்கையில் இன்று குறிப்பிட்டார்.

சிசிடிவி கேமராவை சோதனையிட்ட போது அவ்வாடவர் கருப்பு நிற ஆடை மற்றும் சாக்லெட் நிற கால்சட்டையை அணிந்திருந்ததாகவும் இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 509 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெளிவுப்படுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்