Mar 17, 2026
Thisaigal NewsYouTube
24 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும்
தற்போதைய செய்திகள்

24 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும்

Share:

வரும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை முதல் நாள் ஒன்றுக்கு சராசரி 24 லட்சம் வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM தெரிவித்துள்ளது.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை 15 லட்சம் வாகனங்களும், கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையை ஒரு லட்சத்து 99 ஆயிம் வாகனங்களும், கிழக்கு கரையோர முதலாவது விரைவு சாலையை ஒரு லட்சத்து 6 ஆயிரம் வாகனங்களும், கிழக்கு கரையோர இரண்டாவது விரைவு சாலையை 61 ஆயிரம் வாகனங்களும் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக LLM அறிவித்துள்ளது.

சீனப்புத்தாண்டு வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படும் அதேவேளையில் நாளை வியாழக்கிழமையும், மறுநாள் வெள்ளிக்கிழமையும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு டோல் கட்டணம் இலவசமாகும்.

Related News

24 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் | Thisaigal News