Jul 28, 2026
Thisaigal NewsYouTube
18 கைதிகள் மேலும் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

18 கைதிகள் மேலும் பிடிபட்டனர்

Share:

பேரா, பிடோர் குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை தப்பியோடிய 131 பேரில் மேலும் 18 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு 10 மணி வரையில் 76 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மலேசிய குடிநுழைவுத்துறையின் இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

பிடிப்பட்ட 18 பேரும் பேரா, தாப்பா- வில் ஒரு செம்பனை தோட்டத்தில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்ததாக ரஸ்லின் ஜூசோ கூறினார்.

மலேசிய காவல்துறைபடை மற்றும் பல நிறுவனங்களும் ஒன்றிணைந்து மீதமுள்ள 53 கைதிகள் தீவிரமாக தேடப்பட்டு வருவதாக இன்று செய்தியாளர் கூட்டத்தில் ரஸ்லின் ஜூசோ விவரித்தார்.

Related News