Dec 3, 2025
Thisaigal NewsYouTube
66 ஆவது மெர்டேக்கா தின விழா
தற்போதைய செய்திகள்

66 ஆவது மெர்டேக்கா தின விழா

Share:

நாட்டின் 66 ஆவது மெர்டேக்கா தின விழா, பூச்சோங் மக்கள் முற்போக்கு கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று மிக சிறப்பாக நடைபெற்றது.

பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த மெர்டேக்கா தின விழாவில் ஒரு மலாய் பள்ளி மற்றும் 2 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் 30 பேர் கலந்து கொண்டதுடன் அவர்களுக்காக நடத்தப்பட்ட வர்ணம் தீட்டும் போட்டியில் பரிசும், சான்றிதழும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டன.

பூச்சோங் மக்கள் முற்போக்கு கழகத்தின் தலைவர் மு.கோவிந்தராஜூ முன்னிலையில் ஏற்பாட்டுக் குழு தலைவர் வி.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கழகத்தின் துணைத்தலைவர் மாரிமுத்து, செயலாளர் முகமது மன்சூர் உட்பட பலர் ஒத்துழைப்பு நல்கி நிகழ்வை வெற்றியடைச் செய்தனர்.

நிகழ்விற்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் மூத்தக்குடிமக்கள் 20 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு மக்கள் மத்தியில் ஒற்றுமையை விதைக்கும் வகையில் நடத்தப்பட்டதாக பூச்சோங் மக்கள் முற்போக்கு கழகத்தின் தலைவர் மு. கோவிந்த ராஜூ தெரிவித்தார்.

மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த மெர்டேக்கா தின கொண்டாட்ட நிகழ்விற்கு உதவி நல்கிய நன்கொடையாளர்கள், ஆசிரியர் பெருந்தகைகள் மற்றும் பூச்சோங் மக்கள் முற்போக்கு கழகத்தின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தலைவர் மு.கோவிந்த ராஜூ தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related News