Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மூடா கட்சியியுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும்
தற்போதைய செய்திகள்

மூடா கட்சியியுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும்

Share:

நடந்து முடிந்த 6 மாநிலங்களுக்கான தேர்தலில் மலேசிய சோஷலிச கட்சியான பி.எஸ்.எம் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாவிட்டாலும் அக்கட்சி, சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் தலைமையிலான மூடா கட்சியுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை கொண்டிருக்கும் என்று பி.எஸ்.எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் தெரிவித்துள்ளார்.

தோல்வி ஒரு பொருட்டு அல்ல. ஆனால், கொண்டிருகின்ற கொள்கை மிக முக்கியம். பி.எஸ்.எம் கட்சி, ஏற்கனவே அளித்துள்ள வாக்குறுதிக்கு ஏற்ப மூடா கட்சியுடன் தொடர்ந்து நல்லுறவையும், ஒத்துழைப்பையும் பேணி வரும் என்று அருட்செல்வன் குறிப்பிட்டார்.

Related News