Jul 27, 2026
Thisaigal NewsYouTube
140 ஆயிரம் மெட்ரிக் தான் உள்நாட்டு அரிசி இருப்பதற்கான ஆதாரத்தைக் காட்டவும்
தற்போதைய செய்திகள்

140 ஆயிரம் மெட்ரிக் தான் உள்நாட்டு அரிசி இருப்பதற்கான ஆதாரத்தைக் காட்டவும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 26.

சந்தையில் 140 ஆயிரம் மெட்ரிக் தான் உள்நாட்டு அரிசி கையிருப்பு உள்ளதாக கூறியதற்கான ஆதாரங்களை வழங்கும்படி, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 20ஆம் தேதி நடைபெற்ற வாழ்க்கை செலவின நடவடிக்கை மன்றம் - நக்கோல்-லின் கூட்டத்தில் வழங்கப்பட்டிருந்த அந்த தகவலை சுட்டிக்காட்டி, நக்கோல்-லின் உணவு பிரிவுக்கான நடவடிக்கைக் குழு தலைவரும் புக்கிட் கன்தாங் நாடாளுமன்ற உறுப்பினருமான சியேட் அபு ஹுசின் ஹபிஸ் சியேட் அப்துல் பசல் கேள்வியெழுப்பினார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், உள்நாட்டு அரிசியின் கையிருப்பில் இன்னமும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில்அந்த அரிசியின் கையிருப்பும் போதுமானதாக உள்ளதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் அமலாக்க தரப்பு கூறியுள்ளதைக் கேட்டு தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த 7 மாதங்களாக நாட்டில் உள்நாட்டு அரிசி பற்றாக்குறை நிலவுகின்றது. பிரதமர் அது தொடர்பில் கோபமடைந்த அடுத்த கணமே, 140 ஆயிரம் மெட்ரிக் தான் அரிசி இருப்பதாக தெரிவிக்கப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது.

சந்தையில் அந்த அரிசி உள்ளதைக் கண்டறிய, அதனை விநியோகிக்கும் தொழிற்சாலைகளின் விபரங்களை அமைச்சு வெளியிட வேண்டுமென சியேட் அபு ஹுசின் ஹபிஸ் சியேட் அப்துல் பசல் வலியுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்