Mar 16, 2026
Thisaigal NewsYouTube
உணவகத்தில் இரண்டு சந்தேகிக்கும் நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

உணவகத்தில் இரண்டு சந்தேகிக்கும் நபர்கள் கைது

Share:

ஜொகூர், ஜன 29 -

ஜொகூர், தாமான் இம்பியான் எமாஸ்சில் உள்ள ஓர் உணவகத்தில் சண்டையில் ஈடுபட்ட இரு நபர்களை இன்று வெவ்வேறு சோதனைகளின் அடிப்படையில் கைது செய்யபட்டனர்.

ஸ்கூடாய், ஜாலான் புத்தே, ஜே.பி.யு மாவட்ட காவல்துறை தலைமையகம் மற்றும் ஜொகூர் காவல்துறை தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை ஆகிய குழுக்களால் 40 வயதுடைய சந்தேகிக்கும் ஆடவர் இன்று நள்ளிரவு 12.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் மகிந்தர் சிங் தெரிவித்தார்.

38 வயதான மற்றொரு சந்தேகிக்கும் நபர் பாசிர் கூடாங் அருகிலுள்ள கோத்தா மாசாயில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவு 1 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பல்வீர் சிங் கூறினார்.

குற்றம் புரிந்தவர்களாக சந்தேகிக்கும் அந்நபர்கள் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பதாகவும் வரும் புதன்கிழமை வரையில் அவ்விருவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பல்வீர் சிங் விவரித்தார்.

கூர்மையான ஆயுதங்கள் வைத்து அவ்விருவரும் சண்டையிட்டு கொண்ட 45 வினாடி காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகிய அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Related News