Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வெறும் 3.7 விழுக்காடுதானா?                                                         மேலவை உறுப்பினர் டத்தோ சிவராஜ் கேள்வி
தற்போதைய செய்திகள்

மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வெறும் 3.7 விழுக்காடுதானா? மேலவை உறுப்பினர் டத்தோ சிவராஜ் கேள்வி

Share:

மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 3.7 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும் என்று மேலவை உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்திற்கான இட ஒதுக்கீட்டு கோட்டாவில் பூமிபுத்ராக்களுக்கு 90 விழுக்காடு இடங்களையும் , பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு 10 விழுக்காடு இடங்களையும் அரசாங்கம் ஒதுக்கி வருவதாக டத்தோ சிவராஜ் குறிப்பிட்டார்.

பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பத்து விழுக்காடு இடங்களில் சீனர்களுக்கு 5.43 விழுக்காடும், இந்தியர்களுக்கு 3.72 விழுக்காடு இடங்களும் இதர இனத்தவர்களுக்கு 0.85 விழுக்காடு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக டத்தோ சிவராஜ் தெரிவித்தார்.

மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் ஆண்டுக்கு மொத்தம் 30 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதில் இந்தியர்களுக்கு 3.72 விழுக்காடு இடங்கள் என்றால் ஆண்டுக்கு சராசரி 1,116 இடங்கள் மட்டுமே இந்திய மாணவர்களுக்ஙகு ஒதுக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதே எண்ணிக்கையில்தான் இந்திய மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று டத்தோ சிவராஜ் குறிப்பிட்டார்.

காரணம், மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வரையில் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுடன் ஒப்பிடுகையில் இது மிக குறைந்த எண்ணிக்கையாகும்.
எனவே இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு நடப்புத் தேவைக்கு ஏற்ப 6 விழுக்காடாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை டத்தோ சிவராஜ் கேட்டுக்கொண்டார்.

Related News